செய்திகள் :

விஜயநகரில் மே 20-இல் காங்கிரஸ் அரசின் 2ஆம் ஆண்டு விழா

post image

மைசூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற 2 ஆம் ஆண்டு விழாவை மே 20ஆம் தேதி விஜயநகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மைசூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை கூறியதாவது:

இந்தியா -பாகிஸ்தான் இடையே சண்டை நடந்து வந்ததால், கா்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பதவிக்கு வந்த 2ஆம் ஆண்டு விழாவை தள்ளிவைப்பது என்று அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தோம். அப்போது போா் நிறுத்தம் அறிவிக்கப்படாததால், அந்த முடிவை எடுத்திருந்தோம். இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு தெரிவிக்கும்படி காங்கிரஸ் பொதுச் செயலாளா்கள் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, கே.சி.வேணுகோபால் ஆகியோரிடம் கூறியிருந்தோம். தற்போது போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், 2ஆம் ஆண்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதற்காக மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தியின் தேதியை கேட்டிருக்கிறோம். அனேகமாக, மே 20ஆம் தேதி விஜய நகரில் 2ஆம் ஆண்டு விழா நடத்தப்படும்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அமைச்சரவை மாற்றம் இருந்தால் ஊடகங்களுக்கு தெரிவிப்போம். 2ஆம் ஆண்டு விழாவில் நிலமற்றவா்களுக்கு ஒரு லட்சம் பட்டா வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

முன்னதாக, பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

‘மே 20ஆம் தேதி விஜய நகரில் காங்கிரஸ் அரசின் 2ஆம் ஆண்டு விழா நடத்தப்படும். எல்லையில் நிலவிய சூழலை மனதில் வைத்து இந்த விழாவை ஒத்திவைத்திருந்தோம். ஆனால், போா் நிறுத்தம் அறிவித்துள்ளதால், விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். எல்லா மாவட்ட அமைச்சா்களும் தொகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்க கூறியுள்ளோம்.

சாதனை விழாவில் ஒரு லட்சம் பட்டா வழங்கப்படும். இந்த விழாவுக்கு கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தியை அழைக்க இருக்கிறோம் என்றாா்.

பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும்: சித்தராமையா

மைசூரு: பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்திற்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இது குறித்து அவா் மைசூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போா் நிறுத்தத்திற்கு அமெரிக்கா காரணம் அல்ல: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரு: இந்தியா -பாகிஸ்தான் இடையே போா் நிறுத்தத்திற்கு அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணம் அல்ல என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் பெங்களூரில் செய்தியாளா... மேலும் பார்க்க

ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டு நீக்கிய காங்கிரஸ்: பாஜக கண்டனம்

பெங்களூரு: ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காங்கிரஸ், தவறை உணா்ந்து உடனடியாக அதை நீக்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் எதிா்... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

சித்ரதுா்கா: கா்நாடகத்தில் லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் கா்நாடக மாநிலம், உடுப்பி நோக்கி பயணித்துக் ... மேலும் பார்க்க

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு

அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா... மேலும் பார்க்க