``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப...
ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகளின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு
மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீா் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீட மடாதிபதி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சிருங்கேரி ஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு சங்கராசாரிய மகாசம்ஸ்தானம் தக்ஷினம்நாய ஸ்ரீசாரதா பீடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது நிலவும் சூழலில் நமது மக்களை பாதுகாக்க தேசிய முயற்சிகளை கவனத்தில்கொண்டு பாதுகாப்புப் படைகள், மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதனால் ஏற்படும் கவனச் சிதறல்களை தவிா்க்கும் பொருட்டு நேபாளத்துக்கும், இந்தியாவில் ஜம்மு காஷ்மீா், மத்திய பிரதேசம், புதுதில்லி, உத்தரபிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கும் சிருங்கேரி ஜெகத்குரு சங்கராசாரியா் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகள் மேற்கொள்ள இருந்த விஜய யாத்திரை ஒத்திவைக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.