செய்திகள் :

``நம் எதிரிகள் கோழை; நாங்கள் வென்றுவிட்டோம்'' - பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

post image

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், நேற்று இரு நாடுகளுக்கிடையே தாக்குல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான 3 மணி நேரத்திலேயே பாகிஸ்தான் மீண்டும் இந்திய பகுதிகளை தாக்கியிருப்பதாக செய்திகள் வெளியானது.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)

இந்நிலையில் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் அந்நாட்டு மக்களுக்காக வீடியோவில் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியதாவது, 'பாகிஸ்தான் ஒரு மரியாதைமிக்க மற்றும் பெருமைமிக்க நாடு என்பதை நீங்கள் மீண்டும் உலகிற்கு உணர்த்தியிருக்கிறீர்கள். நம்முடைய தேசத்தின் சுதந்திரத்துக்கு யாராவது சவால்விடும்பட்சத்தில் அதை எதிர்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வோம். கடந்த சில நாள்களில் நம்முடைய எதிரி செய்திருப்பது கோழைத்தனமான மற்றும் அவமானமான செயல்.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் (Shahbaz Sharif)

பஹல்காம் தாக்குதலை இந்தியா ஒரு காரணமாக சொல்கிறது. ஆனால், அதில் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமே சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்தியா நம் மீது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது. அவர்களால் முடிந்த அளவுக்கு நம் மீது தாக்குதல் நடத்த முற்பட்டார்கள்.

பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்
பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்

அப்பாவி மக்களை தாக்கினார்கள். மசூதிகளை தாக்கியிருக்கிறார்கள். நம்முடைய நாட்டின் மதிப்புமிக்க இடங்களையெல்லாம் அவர்கள் தாக்கி அழிக்க நினைத்தார்கள். நாங்கள் அவர்களுக்கு அவர்களின் பாணியிலேயே பதிலடி கொடுத்தோம். நாம் வரலாறு படைத்திருக்கிறோம். வரலாறு நம்மை நியாகப்படுத்தும். நாம் வென்றிருக்கிறோம்.' என்றார்.

Doctor Vikatan: வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபயோகிக்கலாமா, பவுடர் போடலாமா.. எது சரி?

Doctor Vikatan: எனக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். கோடைக்காலத்தில் இன்னும் அதிகம் வியர்க்கும். இதனால் எப்போதும் என் உடலில் வியர்வை வாடை வந்துகொண்டே இருக்கும். வியர்வை வாடையை விரட்ட, பெர்ஃபியூம் உபய... மேலும் பார்க்க

இறுக்கமற்ற பிரா முதல் பாக்ஸர் ஷார்ட்ஸ் வரை.. உள்ளாடை டிப்ஸ்!

அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும், விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்கு பலரும் கொடுப்பது இல்லை. கிழிந்துபோன, பழைய, இறுக்கமான உள்ளாடைகள் அணிந... மேலும் பார்க்க

Kidney Stone: கிட்னி ஸ்டோன் வராமல் தடுக்க முடியுமா? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

சிறுநீரகக் கற்கள் உருவாக காரணங்கள்; எப்படிக் கண்டறிவது; சிறுநீரகக் கற்கள் தடுக்க, தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்கிறார், சிறுநீரகவியல் நிபுணர் என்.ஆனந்தன். சிறுநீரகக் கல்சிறுநீரகக் கற்கள் உருவாக ... மேலும் பார்க்க

`நான் இருக்கும் இடத்தில் இடைவிடாத குண்டு சத்தம் கேட்கிறது' - ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் நகரம் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருள் நிறைந... மேலும் பார்க்க

Pakistan: தீவிரமடையும் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்.. பாகிஸ்தானின் நிலை என்ன?

பாகிஸ்தான், இந்தியா உடனான மோதலில் எல்லை மீறிய தாக்குதலில் ஈடுபட்டுவரும் அதேவேளையில் பாகிஸ்தானுக்குள் இருக்கும் பலுசிஸ்தான் மாகாணத்தின் பகுதிகளைக் கைப்பற்றியுள்ள பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் ராண... மேலும் பார்க்க

300-400 ட்ரோன்களை பயன்படுத்தி தாக்கிய பாகிஸ்தான்; இந்தியா முறியடித்தது எப்படி?

பாகிஸ்தான் ராணுவம் லே முதல் சர் கிரிக் பகுதிவரை இந்திய ராணுவ தளங்களைக் குறிவைத்து 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விங் ... மேலும் பார்க்க