சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு
அன்னையர் நாள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!
அன்னையர் நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில், ”மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் நாள் வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் #MothersDay வாழ்த்துகள்! pic.twitter.com/6sCFPDcqTD
— M.K.Stalin (@mkstalin) May 11, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "அன்பின் மொழியை நம் அனைவருக்கும் அறிமுகம் செய்த அற்புதக் கடவுள்! அன்னையின் தூய அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை இவ்வுலகில்!
தரணி போற்றும் நம் தாய்மார்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த அன்னையர் நாள் நல்வாழ்த்துகள்!” என்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு