திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலை
திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) நிரப்பப்பட உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 12 தேதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.
அறிவிப்பு எண். NITT/R&C/cCauvery/NR/2025/1
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 6
தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பொறியியல் துறையில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான நீர்வள பொறியியல், ஹைட்ராலிக் பொறியியல், ஹைட்ரோ இன்ஃபர்மேடிக்ஸ், வேளாண் பொறியியல், ரிமோட் சென்சிங், புவித் தகவலியல் ஆகியவற்றில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். புவிசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்நிலை மாடலிங் துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ரைட்ஸ் நிறுவனத்தில் புராஜெக் அசோஸியேட் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,000 முதல் ரூ.42,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் https://www.nitt.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ல விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து Dr. Nisha Radhakrishnan, Associate Professor, Department of Civil Engineering, National Institute of Technology, Tiruchirappalli – 620 015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 12.5.2025
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.