செய்திகள் :

சித்தார்த்தின் '3 பிஎச்கே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

post image

நடிகர் சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தார். இப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, இவரது 40-வது படமாக '3 பிஎச்கே' படத்தில் நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் நடிகர்கள் சரத்குமார், தேவயாணி, மீத்தா ரகுநாத், கன்னட நடிகை சைத்ரா அச்சர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்பட சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று, படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 3 பிஎச்கே திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ஹார்ட் பீட் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

எந்தன் உலகம் நீயே... சின்ன திரை நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கம்!

எந்தன் உலகம் நீ தான் என சின்ன திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?

தமிழ்நாட்டில் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வார டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. சின்ன திரை தொடர்கள் அத... மேலும் பார்க்க

ஹார்ட் பீட் - 2 வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டம் உள்ளிட... மேலும் பார்க்க

இணை முன்னிலையில் பிரக்ஞானந்தா

ருமேனியாவில் நடைபெறும் சூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா, டி.குகேஷ் ஆகியோா் 5-ஆவது சுற்றில் டிரா செய்தனா். பிரக்ஞாந்தா மேலும் இருவருடன் இணை முன்னிலையில் இருக்க, குகேஷ் ... மேலும் பார்க்க

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினாா். ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இட... மேலும் பார்க்க

துளிகள்...

இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா உள்ளிட்டோா் பங்கேற்கும் தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டி செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்குகிறது. 19 வயதுக்கு உள்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பி... மேலும் பார்க்க