செய்திகள் :

பஞ்சாப்பில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலி!

post image

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸின் மஜிதியா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த பங்கலி, படல்புரி, மராரி கலான், தெரேவால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 17 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எத்தனால் எனும் ரசாயணத்திற்கு பதிலாக இணையத்தில் வாங்கிய மெதனால்-ஐ பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் எனக் கூறப்படும் நிலையில் இதற்கு காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உறுதியளித்துள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் கலால் துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா ஆகியோர் பதவி விலக வேண்டுமென அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பனைச் செய்த முக்கிய குற்றவாளியான பிரப்ஜித் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயத்தை விநியோகித்த ஏராளமானோர் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளையில், அமிர்தசரஸ் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டு, வீடுவீடாகச் சென்று இந்தக் கள்ளச்சாராயம் அருந்தி யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று சோதனை மேற்கொண்டனர்.

முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாப்பின் சங்குரூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அமிர்தசரஸ் மாவட்டத்தின் மஜிதா பகுதியில் நேற்று (மே 12) விற்பனைச் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற உத்தரவு!

தில்லியில் செயல்பட்டுவரும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் தூதரகத்தில் உ... மேலும் பார்க்க

ரயில் ஓட்டுநர்களின் பணியை எளிமையாக்கிய ரயில்வே துறை!

ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்) மற்றும் உதவி ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது செய்து வந்த கூடுதல் வேலைகளை விலக்கி ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ரயில்கள் இயக்கப்படும் போது அதன் துணை ஓட்... மேலும் பார்க்க

நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-... மேலும் பார்க்க

ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை: சஞ்சீவ் கன்னா

ஓய்வுக்குப் பிறகு எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து இன்றுடன் (மே 13) ஓய்வு பெறவுள்ள நிலையில்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தொடங்கிய விமான சேவை!

ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் ஸ்ரீநகரில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. கடந்த ஏப். 22 அன்று நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் கடந்த ம... மேலும் பார்க்க