செய்திகள் :

`பாகிஸ்தானிடமிருந்து பறிமுதல்செய்த ஆயுதங்களை எங்களிடம் கொடுங்கள்'- இந்தியாவிடம் பலுசிஸ்தான் கோரிக்கை

post image

பலுசிஸ்தான் விடுதலை முன்னணி (BLF) தளபதி அல்லா நாசர் பலோச்சின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

30 நிமிடம் நீளும் அந்த வீடியோவில் அவர், சர்வதேச சமூகம் மற்றும் இந்திய நோக்கி பேசுகிறார். பாகிஸ்தானை பாசிச அரசு என விமர்சிக்கும் அவர், பலுசிஸ்தான் போராட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அல்லா நாசர் பலோச் நீண்டநாட்களாக பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு அவர் இந்தியாவில் மரணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனாலும் பலுசிஸ்தான் அமைப்புகள அதனை மறுத்து வருகின்றன.

2015ம் ஆண்டே அவர் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையில் மரணமடைந்ததாக பாகிஸ்தான் அறிவித்தது. எனினும் அதனை மறுத்து சில மாதங்களில் வீடியோவில் தோன்றினார் அல்லா நாசர்.

Balochistan Liberation Front (BLF) Commander-in-Chief Allah Nazar Baloch

மீடியாக்களும், உளவுத்துறையும் எட்டமுடியாத முக்கிய பலுசிஸ்தான் தலைவரான அவர், இப்போது ஈரானில் மறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வீடியோவில் தோன்றியுள்ள அல்லா நாசர், "1971ம் ஆண்டு போரின்போது வங்காளதேசத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைத்த 93,000 துப்பாக்கிகளை மட்டும் இந்தியா எங்களிடம் தர வேண்டும்." என நேரடியாக இந்தியாவை நோக்கி கேட்டுள்ளார்.

முரட்டு பாசிச அரசான பாகிஸ்தான், பலுசிஸ்தான் இன மக்களை வன்முறை மற்றும் கொலைகள் மூலம் அடக்கி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"பலுசிஸ்தான் சமூகம் அதன் சுதந்திரத்துக்காக போராடுகிறது." என்று தெரிவித்ததுடன், பாகிஸ்தான் ராணுவமும் அதன் கைப்பாவையாக இருக்கும் அமைப்புகளும் காலனித்துவ பாணி அடக்குமுறைகளை நிகழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

பலுசிஸ்தான் கொடி
பலுசிஸ்தான் கொடி

பாகிஸ்தான் ராணுவத்தால் 100க்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் மக்கள் கொல்லப்பட்டதாகவும், காணாமல் ஆக்கப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு நிஷ்தர் மருத்துவமனையில் அடையாளம் தெரியாத பிணங்கள் குவிக்கப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ஊடகங்கள் பாகிஸ்தான் ராணுவத்தின் பார்வையில் மட்டுமே செய்திகளை முன்வைப்பதாக குற்றம் சுமத்தினார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பலுசிஸ்தானின் நடவடிக்கைகள் வலுத்துவரும் சூழலில், பலுசிஸ்தான் படை அப்பாவி மக்களை தாக்குவதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

மாறாக, பாகிஸ்தான் ராணுவத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளையும் கட்டற்ற அதிகாரத்தையும் நியாயப்படுத்த ஒரு எதிரி தேவைப்படுவதால் தங்களை சித்திரித்துக் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் மனிதநேயத்தின் நண்பர்கள், நாங்கள் சுதந்திரத்தை விரும்புகிறோம்" என சர்வதேச சமூகத்தை நோக்கிக் கூறியுள்ளார்.

`அதிமுக வெட்கி தலைகுனிய வேண்டும்; யாரைக் காப்பாற்ற நினைத்தார்களோ...' - தீர்ப்பு குறித்து கனிமொழி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை என்ற கடுமையான தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பி... மேலும் பார்க்க

"துணிச்சலின் உருவம்" - Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Modi: 'உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது; இது இடை நிறுத்தம்தான் ' - மோடி உரையின் ஹைலைட்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என நம்புகிறேன்" - தவெக விஜய்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் குற... மேலும் பார்க்க

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! - வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்ற... மேலும் பார்க்க

INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக்கல்? | Depth

'தாக்குதல் நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்ற... மேலும் பார்க்க

Anbumani-யை எச்சரித்த ராமதாஸ் - மாநாட்டு மேடையில் நடந்தது என்ன? Off The Record Show | PMK

வன்னியர் சங்க இளைஞர் பெருவிழா மேடையில் அன்புமணிக்கும் மருத்துவர் ராமதாசுக்கு இடையில் உள்ள முரண்பாடு வெளிப்படையாக தெரிந்தது. இந்த மாநாட்டு பின்னணியில் நடந்தவைகள் குறித்து பேசுகிறது இன்றைய Off The Recor... மேலும் பார்க்க