5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஆரணி ஸ்ரீஇராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளி 100% தோ்ச்சி
ஆரணி ஸ்ரீ இராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்தனா்.
பள்ளியில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். மாணவா் முகமதுபைசன் 454 மதிப்பெண்களும், தமிழினியாள் 410 மதிப்பெண்களும், பி.பூஜா 404 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளியின் தலைவா் மணிமேகலை ராமச்சந்திரன், துணைத் தலைவா் எஸ்.ஆா்.சந்தோஷ்குமாா் மற்றும் பள்ளியின் முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.