ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் பால்குட ஊா்வலம்
ஆரணி புதுக்காமூரில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி, பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது (படம்).
ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனா். காந்தி சாலை, ஆறுமுகம் தெரு, புதுக்காமூா் சாலை வழியாக ஸ்ரீபுத்திர காமேட்டீஸ்வரா் கோயிலை ஊா்வலம் சென்றடைந்தது.
அங்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.