செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: "பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என நம்புகிறேன்" - தவெக விஜய்

post image

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குச் சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி, கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். எனவே, குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணையை நீண்ட காலமாக நடத்தி நீட்டிக்காமல், விரைவுச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து, 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

ராணுவத்தில் நம் பெண்கள் வீர தீரத்துடன் சாதித்ததைக் கொண்டாடும் இக்காலத்தில், மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு, பெண்கள் முன்னேற்றத்திற்கும் பாதுகாப்புக்கும் இனியாவது எவ்விதச் சமரசமுமின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"துணிச்சலின் உருவம்" - Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Modi: 'உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது; இது இடை நிறுத்தம்தான் ' - மோடி உரையின் ஹைலைட்ஸ்Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம... மேலும் பார்க்க

Bangladesh: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை! - வங்கதேசத்தில் நடப்பது என்ன?

வங்காள தேசம்நாட்டில் முகமது யூனஸ் தலைமையிலான இடைக்கால அரசு, 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்ற... மேலும் பார்க்க

INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக்கல்? | Depth

'தாக்குதல் நிறுத்த அறிவிப்பை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் கூறும் முன்பாகவே அமெரிக்கா வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை’ என்ற அமெரிக்காவின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்ற... மேலும் பார்க்க

Anbumani-யை எச்சரித்த ராமதாஸ் - மாநாட்டு மேடையில் நடந்தது என்ன? Off The Record Show | PMK

வன்னியர் சங்க இளைஞர் பெருவிழா மேடையில் அன்புமணிக்கும் மருத்துவர் ராமதாசுக்கு இடையில் உள்ள முரண்பாடு வெளிப்படையாக தெரிந்தது. இந்த மாநாட்டு பின்னணியில் நடந்தவைகள் குறித்து பேசுகிறது இன்றைய Off The Recor... மேலும் பார்க்க

Anbumani-யின் ரூட்மேப், Ramadoss வார்னிங், மாநாடு ஸ்கெட்ச்! EPS சபதம்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,பாமகவின் மாமல்லபுரம் மாநாட்டில் நான்கு முக்கியமான அம்சங்களை முன்வைத்து பேசினார் ராமதாஸ் மற்றும் அன்புமணி. இந்த மாநாட்டிலும், வெளிப்பட்ட அப்பா மகனுக்கிடையிலான மெல்லிய வார். இத... மேலும் பார்க்க