செய்திகள் :

லாப முன்பதிவால் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

post image

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 4% உச்சம் தொட்ட நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மூதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய முயன்றதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,281.68 புள்ளிகள் சரிந்து 81,148.22 ஆகவும் நிஃப்டி 346.35 புள்ளிகள் சரிந்து 24,578.35 ஆகவும் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு சமமாக முடிந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு ஒரு சதவிகிதம் அதிகரித்தது.

இன்றைய பங்குச் சந்தையின் வீழ்ச்சியானது சுமார் ரூ.1.28 லட்சம் கோடி மதிப்புள்ள செல்வத்தை ஒரே அமர்வில் சரிய வைத்து முதலீட்டாளர்களை உச்ச கட்ட பயத்தில் உறைய வைத்தது.

அமெரிக்க பங்குச் சந்தை உயர்வை தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தையானது நம்பிக்கையுடன் ஏற்றம் கண்டது. அமெரிக்க-சீன வர்த்தக போர் நிறுத்தம் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்த அதே வேளையில், ஐரோப்பிய குறியீடுகள் சிறிய மாற்றத்துடன் வர்த்தகமானது.

துறை வாரியாக மூலதனப் பொருட்கள், ஊடகம், பொதுத்துறை வங்கி, மருந்து குறியீடுகள் 1 முதல் 1.6 சதவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐடி, உலோகம், எஃப்எம்சிஜி, எண்ணெய் & எரிவாயு, ரியல் எஸ்டேட் குறியீடுகள் 0.9 முதல் 2.5 சதவிகிதம் சரிந்தன.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எடர்னல், பவர் கிரிட், கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் நெஸ்லே ஆகியவை சரிந்தும் சன் பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை உயர்ந்து முடிந்தன.

நிஃப்டி-யில் பவர் கிரிட் கார்ப், இன்ஃபோசிஸ், எடர்னல், டிசிஎஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை சரிந்த நிலையில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஜியோ ஃபைனான்சியல், ஹீரோ மோட்டோகார்ப், டாக்டர் ரெடிஸ் லேப்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை உயர்ந்து முடிந்தன.

பிளாக் ஒப்பந்தங்களுக்குப் பிறகு கேஃபின் டெக்னாலஜிஸ் பங்குகள் கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தன. 5% ஈக்விட்டி பங்குகள் இரண்டு முறை கை மாறிய நிலையில் ஸ்விக்கி பங்குகள் 3 சதவிகிதம் சரிந்தன.

ஜேஎம் ஃபைனான்சியலின் பங்குகள் லாப வளர்ச்சியில் 4 சதவிகிதமும் உயர்ந்த நிலையில், 2025ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் சிறந்த எண்களைப் பதிவு செய்ததன் மூலம் ஹீரோ மோட்டோ பங்குகள் 1.5 சதவிகிதம் அதிகரித்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு மற்றும் ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை உயர்ந்த நிலையில் ஹாங்காங்கின் ஹாங் செங் சரிந்து முடிந்தன.

காட்ஃப்ரே பிலிப்ஸ், ரெடிங்டன், சிட்டி யூனியன் வங்கி, டால்மியா பாரத், ஏபிஎல் அப்பல்லோ டியூப்ஸ், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், பாரதி ஹெக்ஸாகாம் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார உயர்வை பதிவு செய்தது.

இதையும் படிக்க: யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயா்வு

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!

புது தில்லி: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!

இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.70 ஆக தொடங்கி வர்... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ... மேலும் பார்க்க

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.உஜாலா, பிரில், மார... மேலும் பார்க்க

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்த... மேலும் பார்க்க