விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!
ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.
ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்தக்க தகவல்களை வெளியிட ஏராளமான ஊகங்கள் தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் புதிய அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுடன் இணைந்து செயல்பட ஆப்பிள் நிறுவனம் முயற்சித்து வருவதாக இன்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியானது.
இதனையடுத்து நிறுவனத்தின் பங்குகள் 7 சதவிகிதம் உயர்ந்து வர்த்தகமானது.
அதே வேளையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் கட்டணங்கள் உயர்வு ஆகியவற்றால் $900 மில்லியன் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களை இந்தியாவிலிருந்து பெற்றதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஐபோன் விலை உயர்வு குறித்து ஆய்வாளர்கள் பல மாதங்களாக ஊகித்து வந்த நிலையில், அத்தகைய நடவடிக்கையால் அதன் சந்தைப் பங்கை இழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக சாம்சங் போன்ற போட்டியாளர்கள் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளியிடும் சாதனங்கள் நுகர்வோரை வெகுவாக ஈர்க்க முயற்சித்து வருகின்றனர்.
மேலும், சீனாவில் பெரும்பாலான ஆப்பிள் சாதனங்கள் அசெம்பிளிங் செய்யப்படுகின்ற நிலையில் அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்களில் சிக்கியுள்ள மிக முக்கியமான நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்றாகும்.
இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டியுள்ள வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விடுத்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ராய்ட்டர்ஸ் நிறுவனம் பதிலளிக்கவில்லை.
இதையும் படிக்க: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 2,975 புள்ளிகள் உயர்வு!