ஏடிஎம் குறித்த வதந்திக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மறுப்பு!
சென்னை: பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகளும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கமளித்ததுடன், அவை மூடப்படுவதாக வரும் வதந்திகள் தவறானவை என்று மறுத்துள்ளது.
வழக்கம் போல் ஏடிஎம் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த தங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கேட்டுகொண்டுள்ளது.
எங்களது ஏடிஎம் சேவை தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக வங்கி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது. அதே வேளையில் ஏடிஎம் மையங்கள் மூடப்படுவதாக பரவும் வதந்திகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தகவல்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தனது வாடிக்கையாளர்களை 1800 425 4445 மற்றும் 1800 890 4445 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிக்க: யெஸ் வங்கியின் 13% பங்குகளை விற்பனை செய்த எஸ்பிஐ!