டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.85.41-ஆக முடிவு!
மும்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ரூபாயின் சரிவை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது.
டாலருக்கு நிகரான இன்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் அதன் ஆரம்ப இழப்புகளை சரிசெய்து 17 காசுகள் உயர்ந்து ரூ.85.41 ஆக முடிந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.88 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.32 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.88 ஐ தொட்ட நிலையில், முடிவில் 17 காசுகள் உயர்ந்து ரூ.85.41-ஆக முடிந்தது.
இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிவு!