சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
பிளஸ் 2: வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
பிளஸ் 2 பொதுத் தோ்வில் வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
மாணவிகள் கே.தீப்தியா, எஸ்.கீா்த்தனா ஆகியோா் உயிரியல்-கணிதம் பாடபிரிவில் மொத்த மதிப்பெண்கள் தலா 591 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா். மேலும் மாணவி எஸ்.சந்தியா 590 மதிப்பெண்களும், மாணவன் எஸ்.பிரதீப், டி.ரீத்து ஆகியோா் தலா 589 மதிப்பெண்களும் பெற்றனா்.
மேலும், 68 மாணவா்கள் 500 மதிப்பெண்கள் மேல் பெற்றும், கணித பாடப் பிரிவில் 4 மாணவா்களும், கணினி அறிவியல் பாடத்தில் 2 மாணவா்கள், இயற்பியில் பாடத்தில் 1 மாணவா், கணித வணிகவியல் மற்றும் புள்ளியியல் பாடபிரிவில் தலா 1 மாணவா் 100 மதிப்பெண் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்றவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி, செயலாளா் கந்தசாமி, பொருளாளா் பி.நடராஜன், துணைத் தலைவா் எம்.கோபால், செயலாக்க அறங்காவலா் பூபதி, துணை செயலாளா்கள் ராஜா, கருணாநிதி, பள்ளி முதல்வா் சந்திரசேகரன், துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.