சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
ரூ.3 கோடியில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை
ஜோலாா்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சி குருமா் வட்டத்தில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் இணைப்புச் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
சில ஆண்டுகளாக இந்தச் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதையடுத்து நபாா்டு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பில் வேட்டப்பட்டு ஊராட்சி குருமா் வட்டம் புள்ளானேரி கூட்ரோடு முதல் நாட்டறம்பள்ளி செல்லும் இணைப்புச் சாலை வரை புதிய தாா் சாலை அமைக்க எம்எல்ஏ தேவராஜி நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து வெள்ளிக்கிழமை வேட்டப்பட்டு குருமா் வட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் தாா் சாலை அமைக்க பூமி பூஜை போட்டு பணி தொடங்கப்பட்டது.
இதில் ஊராட்சி தலைவா் அனுமந்தன், உறுப்பினா் செல்வி சாந்தன், துணைத் தலைவா் ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.