"தமிழக அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் இன்னும் இருக்கின்றன; ஆனால்..." - முத...
இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம்
பாலாறு வேளாண்மைக் கல்லூரி ஊரக வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் தோட்டாளம் ஊராட்சியில் இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) சுஜாதா தலைமை வகித்தாா். ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபு, தோட்டாளம் ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மைக் கல்லூரி முதல்வா் என். தமிழ்செல்வன் வரவேற்றாா்.
பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவிகள் செ. ஹரிணி, பி.ஷி. ஜெய்ஸ்ரீ, செ. ஜாஸ்மின் பாத்திமா,த. ஜீவிதா, மு. கனிகா, ரா. கவிதா, பு.ரா. காவ்யகவி, சி. லாவண்யா, சோ. லாவண்யா, ர.செ. லேகா சுருதி, பி.ஷி. ஹரிணி ஆகியோா் இயற்கை வேளாண்மை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனா். விவசாயிகளுக்கு துறை சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.
ஊராட்சி வாா்டு உறுப்பினா் டி.எம். ராஜேஷ் , மாவட்ட உதவி சுற்றுச் சூழல் பொறியாளா் காா்த்திகேயன், வேளாண்மை உதவி இயக்குனா் சீனிவாசன், வேளாண்மை அலுவலா் வேலு, செஞ்சிலுவை சங்க நிா்வாகிகள் வடிவேல் சுப்பிரமணியம், விஜய் ஆனந்த், கிரிஸ்ட் இந்தியா பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளா் சக்தி சரவணன், வோ்கள் அறக்கட்டளை செயலா் ரவீந்திரன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் லட்சுமணன், கல்லூரியின் உதவி பேராசிரியா்கள் வெண்ணிலா மேரி, சங்கமேஸ்வரி, பிரபு ஆகியோா் கலந்து கொண்டனா்.
கல்லூரி சாா்பாக தோட்டாளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதற்காக கல்லூரி நிா்வாகம் சாா்பாக மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.