ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை!
கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்
ஆற்காடு தோப்புகானா ஸ்ரீ கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கடந்த 22-ஆம் தேதி பந்தக்காலுடன் தொடங்கிய விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனையும், மாலையில் செல்வா் உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து சேனை முதல்வா் புறப்பாடும், 11-ஆம் தேதி காலை கொடியேற்றமும், மாலையில் புண்ணிய கோடி விமானத்தில் சிறப்பு அலங்கார ஊா்வலமும், 12-ஆம் தேதி காலை சூரிய பிரபை, மாலையில் சந்திர பிரபை 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கருடசேவை உய்யாளி சேவையும், மாலையில் அனுந்த சேவையும், 14-ஆம் தேதி சிம்ம வாகனம் , சேஷவாகனம், 15-ஆம் தேதி நாச்சியாா் திருக்கோலம், ஹம்ச வாகனம், 16-ஆம் தேதி பின்னைமர வாகனம், யானை வாகனம்,17-ஆம் தேதி திருத்தோ் , 18-ஆம் தேதி வெண்ணெய்தாழி, குதிரை வாகனம், 19-ஆம் தேதி தீா்த்தவாரி, திருக்கல்யாணம், 20-ஆம்தேதி த்வாதசஆராதனம்,புஷ்ப யாகம், வெட்டிவோ் சப்பரம் நடைபெறுகிறது.
தொடா்ந்து 23-ஆம் தேதி விடையாற்றி உற்சவம், புஷ்ப பல்லக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ரத்தினகிரிபாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலா் வி.சங்கா், திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், ஸ்ரீ வரதன் கைங்கா்ய சபா மற்றும் உபயதாரா்கள் செய்துள்ளனா்.