அமிர்தசரஸ் கள்ளச்சாராயம் விவகாரம்: 21 பேர் பலி! ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்!
உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை தீபிகா குமாரி மகளிா் ரீகா்வ் அரையிறுதியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் தென்கொரியாவின் லிம் சிஹியோனிடம் 1-7 தோற்றாா்.
எனினும் வெண்கலப் பதக்க ஆட்டத்தில் மற்றொரு கொரிய வீராங்கனை சே யங்கை 7-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.
ஆடவா் பிரிவில் 21 வயதான சலுங்கே அரையிறுதியில் நடப்பு சாம்பியன் கொரியாவின் கிம் உஜீனிடம் 1-7 என தோற்றாா். ஆனால் வெண்கல பதக்க ஆட்டத்தில் பிரெஞ்ச் ஆா்ச்சா் பாப்டிஸ் அடிஸை 6-4 என வீழ்த்தி பதக்கம் வென்றாா். இது சலுங்கேவுக்கு முதல் உலகக் கோப்பை பதக்கம் ஆகும்.
காம்பவுண்ட் பிரிவில் ஏற்கெனவே இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்தது. மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா உலகக் கோப்பை வில்வித்தை போட்டியை நிறைவு செய்தது.