செய்திகள் :

எந்தன் உலகம் நீயே... சின்ன திரை நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கம்!

post image

எந்தன் உலகம் நீ தான் என சின்ன திரை காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தவர் நாஞ்சில் விஜயன். தனது தனித்துவமான நடிப்பாலும் நகைச்சுவை திறனாலும், சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரான நாஞ்சில் விஜயன், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டு மரியா என்பவரை இவர் திருமணம் செய்துகொண்டார். சென்னையில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு நிகழ்ச்சிகளில் ஜோடியாகப் பங்கேற்பது, அடிக்கடி சமூகவலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இதனிடையே நாஞ்சின் விஜயன் - மரியா தம்பதிக்கு நேற்று (மே 12) பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனது ரசிகர்களுடன் நாஞ்சில் விஜயன் இன்று பகிர்ந்துள்ளார்.

அதில், மகளை முதல்முறையாகக் கையில் ஏந்திக்கொள்ளும் விடியோவை வெளியிட்டு உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

சித்திரை முழு நிலவில் என்னை அப்பா என்று அழைப்பதற்கு இந்த புவியில் புதியதாய் ஒரு உயிர் பிறந்து விட்டது. வாழ்க்கையில் நான் பட்ட வேதனைகள் எத்தனை எத்தனையோ, அத்தனையும் உந்தன் முகம் பார்க்கும் பொழுது மறந்து போனது என் தங்கமே; இனிமேல் எந்தன் உலகம் நீ தான் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்தப் பதிவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?

சர்ச்சையைக் கிளப்பிய சந்தானத்தின் புதியபட பாடல்!

நடிகர் சந்தானத்தின் புதிய திரைப்படத்தின் பாடல் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிடர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டண... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள் எவை?

தமிழ்நாட்டில் அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வார டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. சின்ன திரை தொடர்கள் அத... மேலும் பார்க்க

சித்தார்த்தின் '3 பிஎச்கே' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் நடித்திருந்தா... மேலும் பார்க்க