மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம் இடித்து அகற்றம்: 159 ஆண்டுகள் பழைமையானது
நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு: பாதுகாப்புத் துறை
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் ராணுவ பட்ஜெட் இரு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாக பாதுகாப்புத் துறை இன்று (மே 13) தெரிவித்துள்ளது.
2013-14 ஆம் ஆண்டில் ரூ. 2.53 லட்சம் கோடியாக இருந்த ராணுவ பட்ஜெட், 2025-26ல் ரூ. 6.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது ஆயுதப் படையை நவீனமயமாக்குவதையும், ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதில் உள்ள நிலைத்தன்மையையும் குறிப்பிடுவதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
’’பாதுகாப்புத் துறை யுக்தியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள், தனியார் துறை பங்களிப்பு மற்றும் புதுமை ஆகியவை பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்தன. இது இந்தியாவை தன்னிறைவடையச் செய்வதோடு மட்டுமின்றி, உலக அரங்கில் நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுத ஏற்றுமதிகொண்ட நாடாகவும் மாறியுள்ளது.
21ஆம் நூற்றாண்டின் போர் சூழல்களில் வலிமைமிக்க சக்தியாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை கருவிகள் இருப்பதை உலகம் உணர்ந்து வருகிறது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்திய விமானப் படையினர் வான்வெளிப் பரப்பிலேயே வைத்து தகர்த்தனர். மேலும், பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தியதையும் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | முப்படைகள் மூலம் பாகிஸ்தானுக்கு உரிய பாடம்: மோடி