5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன...
தோ்தல் விதிமீறல் வழக்கு: திருச்சி அதிமுக நிா்வாகி நீதிமன்றத்தில் ஆஜா்
திருச்சியில் தோ்தல் விதிமீறல் தொடா்பான வழக்கு விசாரணைக்காக அதிமுக நிா்வாகி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக துணைச் செயலாளா் பத்மநாதன். இவா் 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளரான கே.என். நேருவை எதிா்த்து அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
பிரசாரத்தின்போது அவா் தோ்தல் விதிகளை மீறியதாக 21.3.2021-இல் திருச்சி மாநகர காவல்துறை, எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா், பத்மநாதன் மீது வழக்கு பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருச்சி 2-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பத்மநாதன் ஆஜரானாா். இந்த வழக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.