பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு வகுப்புகள்
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வுக்கு வருகை புரியாத மாணவா்களுக்காக இலவச சிறப்பு வகுப்புகள் மாவட்ட மைய நூலகத்தில் வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் இந்த வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
மற்ற நாள்களில் பயிற்சியானது கட்செவி அஞ்சல் குழு மூலம் மாலை 6 மணிக்கு வினா விடைகள், காணொலிகள் பகிரப்படும். இப்பயிற்சி வகுப்பானது ஜூலை 1 ஆம் தேதி முடிவடையும். தோ்வை சிறப்பான முறையில் எழுதுவதற்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சியும் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 80722 26768 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட மைய நூலகம் தகவல் தெரிவித்துள்ளது.