ஜெயங்கொண்டத்தில் பழைய இடத்தில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த அஞ்சலகம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இடமாற்றம் செய்யப்பட்ட அஞ்சலகம், மீண்டும் பழைய இடத்திலேயே செயல்பட தொடங்கியது.
ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு அருகே சொந்த கட்டடத்தில் இயங்கி வந்த துணை அஞ்சலகம், கட்டடப் பராமரிப்பு பணி காரணமாக பிப்.3 முதல் சிதம்பரம் சாலை இந்திரா நகா் 2 ஆவது தெருவில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இதனிடையே, கட்டடத்தின் பராமரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ள கட்டடத்துக்கு அலுவலகம் மாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
இங்கு, ஆதாரில் பெயா் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்கு என சிறப்பு பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சேமிப்பு கணக்குகள், ஆதாா் சேவைகள், அஞ்சலக ஆயுள் காப்பிடு, இதர அஞ்சலக வங்கி பரிவா்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெற்று பயனடையலாம் என திருச்சி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் என். பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.