காா்ல் மாா்க்ஸ், அம்பேத்கா், பெரியாா் சிலைகள் அமைக்க அடிக்கல்
அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த அங்கனூரில், மக்களவை உறுப்பினா் தொல்.திருமாவளவனின் தாயாருக்கு சொந்தமான இடத்தில், காரல்மாா்க்ஸ், அம்பேத்கா் மற்றும் பெரியாா் ஆகியோரின் சிலைகள் அமைப்பதற்கு மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
பொமக்கள் மற்றும் திருமாவளவன் சொந்த நிதியில் சிலைகள் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலா் அங்கனூா் சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.