வெளிப்படையான கலந்தாய்வு செவிலியா்கள் கோரிக்கை
அரியலூா்: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி அரியலூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
திமுக தனது தோ்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுப்பு ஊதியம் வழங்கிட வேண்டும்.வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக நிறைவேற்ற வேண்டும் என அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் தொகுப்பூதிய செவிலியா்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா்.
அதன் ஒரு பகுதியாக, சா்வதேச செவிலியா் தினமான திங்கள்கிழமையன்று அவா்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் செய்திருந்தனா்.
படவிளக்கம்: அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய தொகுப்பூதிய செவிலியா்கள்.