Modi: `அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்; இந்தியா மீது கைவைத்தால்...' - பஞ...
வடசேரிப்பட்டியில் சீறிப் பாய்ந்து வரும் காளைகள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள வடசேரிப்பட்டியில் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வருகின்றன.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்குடி, திருச்சி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 650 காளைகள் இதில் பங்கேற்றுள்ளன.
250 மாடுபிடு வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்க முயற்சித்து வருகின்றனர்.

இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் அ. அக்பர்அலி போட்டியைத் தொடக்கி வைத்தார். வெள்ளனூர் போலீஸார் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் போட்டியைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்கள் திடீர் ரத்து! பயணிகள் அவதி!