நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!
உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி வருகிற மே 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.
அதற்குப் பதிலாக மே 31 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக திங்கள்கிழமை உதகைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.
இதையும் படிக்க | பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! 6 பேர் கவலைக்கிடம்!