செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி லார்ட்ஸ் திடலில் வருகிற ஜூன் 11 தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

அடுத்த மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.

அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துகிறார். கடந்த அக்டோபருக்குப் பிறகு லுங்கி இங்கிடி டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கிரிக்கெட் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ககிசோ ரபாடா அணியில் இடம்பெறுவாரா சந்தேகம் எழுந்த நிலையில், அவரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட செனுரான் முத்துசாமி தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் நாகப்பட்டினத்தை பூர்விகமாகக் கொண்டவர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், கார்பின் போஸ்ச், டோனி டி ஸார்ஸி, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, லுங்கி இங்கிடி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மே... மேலும் பார்க்க

ரோஹித், விராட்டின் ஓய்வு இங்கிலாந்துக்கு மிகவும் சாதகமானது: மொயின் அலி

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுள்ளது இங்கிலாந்துக்கு மிகவும் சாதகமானது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் மூத்த... மேலும் பார்க்க

பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை: முன்னாள் இந்திய பயிற்சியாளர்

பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிரு... மேலும் பார்க்க

ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பிரபல ஆன்மிக குருவை சந்தித்த விராட் கோலி!

டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு விராட் கோலி பிரபல ஆன்மிக குருவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு புதிய பயிற்சியாளர்; 2023-லிருந்து ஐந்தாவது முறை பயிற்சியாளர் மாற்றம்!

பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான புதிய தலைமைப் பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) நியமித்துள்ளது.கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்த அணியின்... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மே 13) அறிவித்துள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அண... மேலும் பார்க்க