ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பிரபல ஆன்மிக குருவை சந்தித்த விராட் கோலி!
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு விராட் கோலி பிரபல ஆன்மிக குருவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். அண்மையில் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், விராட் கோலியும் ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
ஆன்மிக குருவிடம் ஆசி பெற்ற விராட் கோலி
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி நேற்று அறிவித்த நிலையில், பிரபல ஆன்மிக குருவான பிரேமானாந்த் சஹாரன் ஜி மகாராஜிடம் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இன்று ஆசி பெற்றுள்ளனர்.
Virat Kohli with wife Anushka Sharma reaches VRINDAVAN after announcing his retirement from test cricket,
— Sheetal Chopra (@SheetalPronamo) May 13, 2025
to seek blessings of Sant Premanand Govind Sharan ji Maharaj
How much ever Successful You are
You bow down in front of Guru and that’s
Sanatan Sanskriti
Jayatu Sanatan pic.twitter.com/b2WYN3HIDF
விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி பிரேமானாந்த் சஹாரன் ஜி மகாராஜிடம் ஆசி பெறும் விடியோவினை அவரது சீடர்கள் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது, அந்த விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலும் ஆன்மிக குருவான பிரேமானாந்த் சஹாரன் ஜியை விராட் கோலி அவரது குடும்பத்துடன் சந்தித்ததாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.