Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை: முன்னாள் இந்திய பயிற்சியாளர்
பயிற்சி ஆட்டங்களை விராட் கோலி ஒருபோதும் விரும்பியதில்லை என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (மே 12) அறிவித்தார். ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து, விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: ஓய்வு அறிவிப்புக்குப் பிறகு பிரபல ஆன்மிக குருவை சந்தித்த விராட் கோலி!
கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். அவர் இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளார். இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 9,230 ரன்கள் குவித்துள்ளார். அதில் 30 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 46.85 ஆக உள்ளது.
பயிற்சி ஆட்டங்களை விரும்பாத விராட் கோலி
டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ள நிலையில், விராட் கோலி ஒருபோதும் பயிற்சி ஆட்டங்களை விரும்பியதில்லை என இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியா மற்றும் உலக டெஸ்ட் கிரிக்கெட் விராட் கோலியை கண்டிப்பாக மிஸ் செய்யும். விராட் கோலி கேப்டனாக இருந்தபோது, இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நான் செயல்பட்டது எனக்கு கிடைத்த சிறப்பான தருணம். அந்த சிறப்பான நினைவுகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்.
இதையும் படிக்க: பாகிஸ்தானுக்கு புதிய பயிற்சியாளர்; 2023-லிருந்து ஐந்தாவது முறை பயிற்சியாளர் மாற்றம்!
விராட் கோலி பயிற்சி ஆட்டங்களை ஒருபோதும் விரும்பியதில்லை. பயிற்சி ஆட்டங்களில் அந்த அளவுக்கு தீவிரத் தன்மை இல்லை என அவர் எப்போதும் நினைப்பார். பயிற்சி ஆட்டங்களுக்குப் பதிலாக அவர் அதிக நேரம் பேட்டிங் பயிற்சி மேற்கொள்வார். சவாலான ஆடுகங்களில் பேட்டிங் பயிற்சி மேற்கொள்வார். உண்மை என்னவென்றால், அவருக்கு எப்போதும் சவாலான சூழல் வேண்டும். அதுவே அவரை தொடர்ந்து முன்னேறச் செய்வதாக நினைக்கிறேன்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய அணி பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடியது. அந்தப் போட்டியில் விராட் கோலி சதம் விளாசி அசத்துவார். இருப்பினும், இந்திய அணியால் அந்த போட்டியில் வெற்றி பெற முடியவில்லை.
அதன் பின், மெல்போர்ன் போட்டிக்கு முன்பாக வீரர்களின் மனநிலையை அவர் முற்றிலுமாக மாற்றினார். நம்மால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை வீரர்களுக்கு கொடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. விராட் கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் அவர் கண்டிப்பாக மிஸ் செய்யப்படுவார் என்றார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனான விராட் கோலி, கேப்டனாக செயல்பட்ட 68 போட்டிகளில் 40 வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.