"சிந்து நதி ஒப்பந்தம்; பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்த வேண்டும்" - ரந்தீர் ஜெய்ஸ்வால்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதையடுத்து இரு நாடுகளும் தாக்குதல்களை நடத்த நாடு முழுவதும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சூழலை கட்டுக்குள் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா தொடர்ந்து பேசிவந்தது. இதையடுத்து கடந்த மே 10 ம் தேதி தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜம்மு - காஷ்மிர், பஞ்சாப் உள்ளிட்ட இந்தியா - பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் போர் பதற்றம் நிலவிய வண்ணமிருக்கிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு. இதையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடுப்பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருகிறது. பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும். பஹல்காமில் தாக்குதல் நடத்திய TRF பயங்கரவாத அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஐ.நா. அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாதத்தை வளர்த்து வரும் ஒரு நாடு, அதன் விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
