செய்திகள் :

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!

post image

புது தில்லி: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.34 சதவிகிதமாகவும், ஏப்ரல் 2024ல் அது 4.83 சதவிகிதமாகவும் இருந்தது. இதுவே ஜூலை 2019ல் இது 3.15 சதவிகிதமாக இருந்தது.

மார்ச் 2025 உடன் ஒப்பிடும்போது ஏப்ரல் 2025ல் உணவுப் பணவீக்கத்தில் 91 புள்ளிகள் சரிந்துள்ளது. இதுவே ஏப்ரல் 2025ல் உணவுப் பணவீக்கமானது அக்டோபர் 2021க்குப் பிறகு இது மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.

உணவுப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.78 சதவிகிதமாக இருந்த நிலையில் அதன் முந்தைய மாதத்தில் இது 2.69 சதவிகிதமாகவும், அதன் முன்பு இது 8.7 சதவிகிதமாகவும் இருந்தது.

2025-26 நிதியாண்டிற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண் பணவீக்கம் 4% இருக்கும் என்று மத்திய வங்கி கணித்துள்ளது. முதல் காலாண்டில் இது 3.6 சதவிகிதமும், இரண்டாவது காலாண்டில் அது 3.9 சதவிகிதமும், மூன்றாவது காலாண்டில் அது 3.8 சதவிகிதம் மற்றும் 4-வது காலாண்டு இது 4.4 சதவிகிதமாகும்.

2025 ஏப்ரல் மாதத்தில் பிரதான பணவீக்கம் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவுக்கு காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், இறைச்சி மற்றும் மீன், தானியங்கள் ஆகியவற்றின் பணவீக்கம் குறைந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று திட்ட அமலாக்க அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில், கடுகு எண்ணெயின் பணவீக்கம் 19.6 சதவிகிதமாகவும், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 23.75 சதவிகிதமாகவும், ஆப்பிள் 17 சதவிகிதமாகவும், வெங்காயம் 2.94 சதவிகிதமாகவும் இருந்தது.

2025ல் கிராமப்புற பணவீக்கம் ஏப்ரல் 2025ல் 2.92 சதவிகிதமாக இருந்த நிலையில் அதற்கு முந்தைய மாதத்தில் அது 3.25 சதவிகிதமாக இருந்தது.

நகர்ப்புற பணவீக்கம் மார்ச் 2025ல் 3.43 சதவிகிதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 3.36 சதவிகிதமாக குறைந்தது.

தரவுகளின் அடிப்படையில் அதிகபட்ச பணவீக்கம் கேரளாவில் 5.94 சதவிகிதமாகவும், குறைந்தபட்ச பணவீக்கமாக தெலுங்கானாவில் 1.26 சதவிகிதமாகவும் பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசு உயர்ந்து ரூ85.33-ஆக முடிவு!

இன்றைய அந்நிய செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.33 ஆக முடிந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 84.70 ஆக தொடங்கி வர்... மேலும் பார்க்க

லாப முன்பதிவால் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் சரிவு!

மும்பை: நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 4% உச்சம் தொட்ட நிலையில், இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் மூதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ய முயன்றதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தன.வர... மேலும் பார்க்க

ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம்!

சென்னையில் தங்கத்தின் விலை ஒரேநாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.750 உயர்ந்து சவரன் ரூ.70,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ... மேலும் பார்க்க

ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சா்க்கரை ஏற்றுமதி

நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக 92,758 டன் சா்க்கரை சோமாலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

ஜோதி லேப்ஸின் 4-வது காலாண்டு லாபம் 2.4% சரிவு, வருவாய் அதிகரிப்பு!

புதுதில்லி: எஃப்எம்சிஜி நிறுவனமான ஜோதி லேப்ஸ் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2.4 சதவிகிதம் குறைந்து நிதியாண்டு 2025 மார்ச் காலாண்டில் ரூ.76.27 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.உஜாலா, பிரில், மார... மேலும் பார்க்க

விலை உயர்வை குறித்து ஆலோசித்து வரும் ஐபோன்!

ஆப்பிள் நிறுவனம் தனது வரவிருக்கும் ஐபோன் 17 சீரிஸை அறிவிக்க உள்ளது.ரசிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த தலைமுறை சாதனங்கள் தொடர்பான குறிப்பிடத்த... மேலும் பார்க்க