செய்திகள் :

நாகை சிறுமி மர்மச் சாவு? ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் போராட்டம்; ஜன்னலில் எட்டிப் பார்த்த கலெக்டர்

post image

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் இளைஞர் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இருவரும் ரயில் மூலம் வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளனர். இதில் வேளாங்கண்ணி அருகே ரயிலிலிருந்து கீழே விழுந்த அந்த சிறுமி ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார்.

சிறுமியுடன் வந்தவர் இது குறித்து தகவல் தெரிவிக்காமல் தலைமறைவாகி விட்டதாகச் சொல்கிறார்கள்.

கலெக்டர் ஆகாஷ்
கலெக்டர் ஆகாஷ்

இறந்தவர் குறித்த எந்த விபரமும் தெரியாததால், யாரும் அவரைத் தேடி வராததால் போலீஸாரே இறுதிச்சடங்கைச் செய்து அடக்கம் செய்து விட்டனர்.

இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் வேளாங்கண்ணி காவல் நிலையத்துக்கு வந்து தங்கள் மகளைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர்.

அதற்கு போலீஸார் மகளின் போட்டோ குறித்த விவரங்கள் கேட்டுள்ளனர்.

இதையடுத்து போட்டோ உள்ளிட்ட விவரங்களை எடுத்து வந்த போது காவல் நிலையத்தில் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததாக தங்கள் மகள் போட்டோ ஒட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர்.

அப்போது தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறினர். மேலும் இது தொடர்பாகச் சில தினங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆட்சியர் ஆகாஷிடம் மனு அளிக்கச் சென்றுள்ளனர்.

மகள் இறப்பில் மர்மம் உறவினர்கள் போராட்டம்
மகள் இறப்பில் மர்மம் உறவினர்கள் போராட்டம்

அலுவலகத்திலிருந்த மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்திக்கவில்லை. அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

"எங்க பொண்ணு பேண்டை கழட்டி கொண்டா சாவாள்" என்று கத்திக்கொண்டே கதறினர். இதை ஜன்னலிலிருந்து பார்த்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உறவினர்களை அழைத்து என்னவென்று கூட கேட்கவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.

மகள் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். அவரது இறப்புக்கான காரணம் தெரியாமல் அந்த பெற்றோர் தவித்துக் கதறிய சூழலிலும் மாவட்ட ஆட்சியர் என்னவென்று கூட விசாரிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாகப் பலரும் இதை விமர்சனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் சிறுமியின் இறப்புக்குக் காரணம் என்ன, அவரை யாராவது ரயிலிலிருந்து தள்ளி விட்டார்களா, திருமணம் செய்து கொண்டவர் ஏன் இதை போலீஸில் சொல்லவில்லை எனப் பல கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தாய், தந்தை உட்பட உறவினர்கள் 4 பேரைக் கோடரியால் கொன்ற வழக்கு; கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நந்தன்கோடு க்ளப்ஹவுஸ் அருகே வசித்து வந்தவர் ராஜாதங்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருட்டு; சிசிடிவி-யால் சிக்கிய பெண்!

சென்னை சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுகந்தி. இவரின் அம்மா ஷீலா. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கி... மேலும் பார்க்க

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்' - INS விக்ராந்த் லொகேஷன் கேட்ட இளைஞர் கைது.. என்ன நடந்தது?

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் பாகிஸ்தானின்... மேலும் பார்க்க

`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய்துள்ள தம்பதி - ஏன்?

தற்போதைய உலகில் மரணத்திற்கான நேரத்தை தானே குறித்துக்கொள்ளும் செயல் சர்ச்சையான விவாதங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்விட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இது சட்டபூர்வமாக இருந்தாலும் பிரிட்டன், இந்தி... மேலும் பார்க்க

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வ... மேலும் பார்க்க