செய்திகள் :

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

post image

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்குச் சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19) என்பதும், கோல்டன் நகரில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அமைந்துள்ளது. அந்த பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்பட்ட தகராறு கோல்டன் நகரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து மோதிக்கொண்டனர்.

கொலை செய்யப்பட்ட பிரகாஷ் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பு மாணவர்களைத் தாக்கியுள்ளார்.

கைது
கைது

இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், பிரகாஷைத் தாக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாகரபுரியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு வாங்க பிரகாஷ் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட ஒரு தரப்பு மாணவர்கள் பிரகாஷை அழைத்துச் சென்று தாக்கி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததுள்ளனர்.

பிரகாஷ் உயிரிழந்ததால், அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்தக் கொலை தொடர்பாக கருணாகரபுரியைச் சேர்ந்த தருண்குமார் (20), பாலிடெக்னிக்கில் படிக்கும் 16 வயது மாணவர், பிளஸ் 2 முடித்த 17 வயதைச் சேர்ந்த 4 சிறுவர் உள்பட 6 பேரைத் திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

கல்லூரியில் ஏற்பட்ட மோதலில் மாணவர்களால் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளது திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பட்டியலின இளைஞர் தற்கொலை: நீதிமன்ற அதிகாரியின் சாதி ரீதியான சித்திரவதை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வட்டக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(33). இவர் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார்.நேற்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டில் யார... மேலும் பார்க்க

போதைப்பொருளுக்கு ரூ.70 லட்சம் செலவு; மும்பை வியாபாரியிடம் ஆர்டர் - பெண் டாக்டர் சிக்கியது எப்படி?

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் நம்ரதா. டாக்டரான நம்ரதா, ஐதராபாத்தில் உள்ள ஒமேகா மருத்துவமனையில் 6 மாதம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். நம்ரதா அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதாக போல... மேலும் பார்க்க

தூத்துக்குடி கொலைச் சம்பவத்தில் 7 ஆண்டுகளுக்குப்பிறகு... கொலையாளிகள் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகலாபுரம் காட்டுப்பகுதியில் கடந்த 23.12.2018 அன்று அடையாளம் தெரியாத ஆண் உடல் காயங்களுடன் கிடப்பதாக வந்த தகவலின் பேரில் சங்கரலிங்கபுர... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் காணாமல்போன 107 கிராம் தங்கம் - கண்டுபிடித்தது எப்படி?

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். இக்கோயிலில் தங்க நகைகள் உள்ளிட்ட பழமையான பொக்கிஷங்கள் உள்ளன. எனவே 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்... மேலும் பார்க்க

நண்பர்களால் நடந்த பாலியல் வன்கொடுமை, மைனர் பெண்ணுக்கு நடந்த கொடூரம்; தோழி படுகொலை

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் ஒருவர் தன் நண்பர்கள் சந்தீப் மற்றும் அமித் ஆகியோருடன் இரவில் காரில் வெளியில் சென்றார். அவர்களுடன் 19 வயது பெண் ஒருவரும் இருந்தார். வழியில் க... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம்; கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட மளிகைக் கடைக்காரர்

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முக்காணியைச் சேர்ந்தவர் பொங்கல்ராஜ். இவருக்கு முத்துக்கனி என்ற மனைவியும் ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். பொங்கல்ராஜ், தூத்துக்குடி முத்தையாபுரத்தில் பல சரக்க... மேலும் பார்க்க