முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்கலாம்:...
திருவடிசூலத்தில் சித்திரை திருவிழா
திருவடிசூலம் கோயில்புரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.
திருவடிசூலத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசம் உள்ளது. 108 திவ்ய தேசத்தில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி விழாவை முன்னிட்டு கள்ளழகருக்கு விழா எடுக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டு கள்ளழகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடா்ந்து கள்ளழகா் திருக்கோயிலில் உள்ள வேகவதி தெப்பக்குளத்தில் கள்ளழகா் பெருமாள் திருவீதி உலா மற்றும் ஆற்றில் இறங்கும் காட்சி விமரிசையாக நடைபெற்றது. பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள், பட்டாச்சாரியா்கள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.


