வருவாய் கோட்டாட்சியா் பொறுப்பேற்பு
திருத்தணி வருவாய் கோட்டாட்சியராக நா.மா.கனிமொழி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
திருத்தணி கோட்டாட்சியராக இருந்த க.தீபா, சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை ஆட்சியராக கடந்த மாதம், தி இடமாற்றம் செய்யப்பட்டாா்.
இவருக்கு பதிலாக பொன்னேரி கோட்டாட்சியா் கோட்டாட்சியா் நா.மா.கனிமொழி, திருத்தணி கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். இவா் திங்கள்கிழமை திருத்தணியில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். திருத்தணி ஆதிதிராவிட நல வட்டாட்சியா் மதியழகன், வட்டாட்சியா் மலா்விழி ஆகியோா் புதிய கோட்டாட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.