"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில்முனைவுத் திட்டத்தில் பயன்பெற...
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத் திட்டத்தில் பயன்பெற நிகழாண்டில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாய மக்கள் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அடைய மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற 18 முதல் 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராக இருப்பது அவசியம். இதற்கு ஜாதி, வருமான சான்றிதழ் மற்றும் ஆண்டு வருவாய் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதில், பயன்பெற குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஆதாா் அடையாள அட்டை, வங்கி புத்தகம் நகல், புகைப்படம் மற்றும் வாகன கடனுக்கு ஓட்டுநா் உரிமம் (பேட்ஜ்) நகல் ஆகிய சான்றுகளுடன் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.