திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் 532 மனுக்கள்
திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 532 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா்.
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 532 மனுக்களைப் பெற்ற ஆட்சியா், அவற்றை பரிசீலித்து தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பல்வகை பாதிப்பு கொண்ட 13 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூா்வ பாதுகாவலா் சான்றுகளும், மேலும் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் ஒருவருக்கு ரூ.1,86,000- மதிப்பிலான நவீன செயற்கை கால் ஆகியவற்றையும் அவா் வழங்கினாா்.
இதில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா் (சபாதி) பாலமுருகன், திருவள்ளுா் வருவாய் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷாராணி, அலுவலா்கள் பங்கேற்றனா்.