Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
Tourist Family: "எனக்கே டிக்கெட் கிடைக்கல; படம் வெற்றி அடையும்னு தெரியும்; ஆனா.." - இயக்குநர் அபிஷன்
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'.
இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று படக்குழு நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தி இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், "இந்தப் படம் வெற்றிப் படமாக இருக்கும் என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால் இந்த அளவிற்கு வெற்றிப் படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை.
மூன்று நாளுக்கு முன்னாடி என் குடும்பத்துடன் படத்திற்குச் செல்ல நினைத்தபோது எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. சென்னை மட்டுமின்றி எல்லா இடங்களிலும் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கிறார்கள்.
இந்த வெற்றியை அமைத்துக் கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி. சசி சார் எனக்கு நிறைய விஷயங்களைச் செய்திருக்கிறார்.
இதை நான் எப்போதுமே மறக்க மாட்டேன். சிம்ரன் மேமுடன் பணியாற்றியதை மிகவும் பாக்கியமாக நினைக்கிறேன்.

என்னுடைய பள்ளி ஆண்டு விழாவிற்குச் சிம்ரன் மேம் வந்ததிலிருந்து, இந்தப் படத்தில் பணியாற்றியது வரை எல்லாமே கனவாக இருக்கிறது" என்று படக்குழுவினர் ஒவ்வொரு பேரையும் குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...