செய்திகள் :

DD Next Level: "நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்" - 'கோவிந்தா' பாடல் விவகாரத்தில் சந்தானம் பளீச்

post image

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆர்யா தயாரிப்பில் சந்தானத்துடன் கௌதம் மேனன், யாஷிகா ஆனந்த் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

‘டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில்
‘டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில்

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ஆர்யா, சந்தானம், இயக்குநர் பிரேம் ஆனந்த் என மூவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சந்தானம், "'கோவிந்தா' பாடல் கடவுளைக் கிண்டல் செய்வது கிடையாது. நிறையப் பேர் நிறைய விஷயங்களைச் சொல்வார்கள்.

படம் பார்க்கும் பலரும் இது சரியில்லை, மாற்ற வேண்டும் எனப் பரிந்துரை செய்வார்கள். ஆனால், அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி வாழவும் முடியாது. நீதிமன்றம் சொல்வதையும், தணிக்கைக் குழு சொல்வதையும் தான் தமிழ் சினிமாவில் செய்ய முடியும்.

Santhanam at DD Next Level Press Meet
Santhanam at DD Next Level Press Meet

போகிறவர்கள், வருகிறவர்கள் சொல்வதைக் கேட்டுப் பண்ண முடியாது. 'பெருமாள்' கடவுள், 'கோவிந்தா கோவிந்தா' பாடலையும் படத்தில் கிண்டல் செய்வதாக இல்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். நான் கடவுளைக் கிண்டல் செய்யமாட்டேன்.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு படத்தின் வெளியீட்டுத் தேதியையும் தள்ளிவைக்க யோசித்தோம்.

ஆனால், இன்று காலை வெளியான செய்தியைப் பார்த்த பிறகுதான் அடுத்தடுத்த வேலைகளுக்கு நகர்ந்தோம்.

படத்தைப் பார்ப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுவதற்குக் காட்சிகளைக் கட் செய்து ட்ரைலரில் அப்படியே வைப்போம்.

அதைப் பார்க்கும்போது உங்களுக்குள் கேள்வி எழும். 'உயிரின் உயிரே' பாடலைப் பயன்படுத்தியது கிண்டலாகவே இருக்காது. கௌதம் சார் 'காக்க காக்க' படத்தின் இயக்குநர்.

Santhanam at DD Next Level Press Meet
Santhanam at DD Next Level Press Meet

அவர் அதை ஒரு காரணத்திற்காகச் செய்யும்போது அது தவறாக இருக்காது.

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தால் முன்பு இருந்தது போன்ற கதாபாத்திரம் இருக்காது.

புதிதாக ஒன்றைப் பண்ணுவேன். அதையும் நான் திட்டமிடுவேன். நிறையப் படங்களில் இப்படியே நடிப்பேனா எனத் தெரியாது.

ஆனால், நிச்சயமாக பழைய கதாபாத்திரங்களைப் போலப் பண்ண முடியாது." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vetrimaaran: "20 ஆண்டுகளுக்கு முன்பு, நானும் அதே சூழலில்தான் இருந்தேன்" - வெற்றி மாறன் ஓப்பன் டாக்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் 'விடுதலை 2' திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது 'வாடிவாசல்' படத்தின் முதற்கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில... மேலும் பார்க்க

Benz: லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ்! பூஜை ஸ்டில்ஸ் | Photo Album

Lokesh Kanagaraj: "அப்போதான் LCU முடிவுக்கு வரும்" - லோகேஷ் கனகராஜின் லைன் அப் இதான்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசி... மேலும் பார்க்க

Coolie: "விஜய் அண்ணாவிடம் 'மாஸ்டர் 2' படத்துக்கான ஐடியாவைச் சொன்னேன்" - லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் 'கூலி' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.அதற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் 50 ஆண்டுக் கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் 'கூலி' திரை... மேலும் பார்க்க

Vels Wedding: ரவி மோகன், சூரி, பிரதீப், கயாடு லோஹர்; ஐசரி கணேஷின் இல்ல திருமண வரவேற்பு | Photo Album

VJ Siddhu: 'பயங்கரம் இல்ல பாஸ் டயங்கரம்!' - இயக்குநராகும் வி.ஜே சித்து!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அச... மேலும் பார்க்க

விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவமனை சொல்வதென்ன?

நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், நடிகர் விஷால் மயங்கி விழுந்தது பேசுபொருளாகி உள்ளது.விழுப்புரத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில், நேற்று தென்னிந்திய திருநங்கைகள... மேலும் பார்க்க

``நேற்று வந்த விஜய் சாரைப் பார்த்து உதய் அண்ணா பயப்படுறார்ன்னு சொல்றதை...'' - திவ்யா சத்யராஜ் பேட்டி

சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ் பதிவிட்ட கருத்து, சமூக வலைதளங்கள் எங்கும் பேசுபொருளாகி இருக்கிறது.அதுவும், “அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகள்... மேலும் பார்க்க