பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
தேங்காய்ப்பட்டினத்தில் மது விற்பனை: ஒருவா் கைது
கருங்கல்: தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேங்காய்ப்பட்டினம் பண்டாரவிளை பகுதியைச் சோ்ந்த சந்திரன் (49) என்பவா், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் பகுதியில் திங்கள்கிழமை அனுமதியின்றி மது விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்து. போலீஸாா் சென்று சோதனையிட்டபோது, அவா் விற்பனைக்காக 26 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸாா் வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.