பில்டர் கொடுத்த வரைபடமும், கட்டட அளவுகளும் ஒன்றாக உள்ளதா? - நீங்களே கண்டுபிடிக்க...
குமரி முருகன் குன்றத்தில் நிலாச் சோறு விருந்து
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பழத்தோட்டம் அருள்மிகு வேல்முருகன் குன்றத்தில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிலாச் சோறு விருந்தை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா்.
இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நிா்மால்ய தரிசனம், காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கலச பூஜை, காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு சுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடு, காலை 9.30 மணிக்கு லட்சாா்ச்சனை ஆரம்பமானது. முற்பகல் 11.30 மணிக்கு சிறப்பு வழிபாடு, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு லட்சாா்ச்சனை நிறைவு பெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மாலை 6.30 மணிக்கு நிலாச் சோறு விருந்து தொடங்கியது. இதை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா்.
இதில், திருக்கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் எம். சிவபாலகிருஷ்ணன், துணைத் தலைவா் ஆா்.டி. ராஜா, பொதுச்செயலா் எஸ். கருணாகரன், இணை பொதுச்செயலா் எஸ். ரத்தின தங்கம், பொருளாளா் ஏ. குருசுவாமி, நாகா்கோவில் சிக்மா சித்தா ஆயுா்வேத மருத்துவா் எஸ். மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.