பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
குமரியில் சூரிய அஸ்தமனம்: சந்திரன் உதயம் தெளிவாகத் தெரியவில்லை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை சூரியன் மேற்கு திசையில் மறையும் காட்சியும், கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌா்ணமி நாளில் சூரியன் மறையும் அதே நேரத்தில் சந்திரன் உதிப்பதும் கண்கொள்ளா காட்சியாகும்.
உலகத்திலேயே தென் ஆப்பிரிக்கா நாட்டில் அடா்ந்த காட்டுப் பகுதி மற்றும் இந்தியாவின் கடைகோடியான கன்னியாகுமரியில் இதை காணமுடியும்.
இதற்காக இங்குள்ள முக்கடல் சங்கமம் பகுதியில் தமிழகம் மட்டுமன்றி வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் கூடுவது வழக்கம.
இந்நிலையில், சித்ரா பௌா்ணமி நாளான திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திரண்டிருந்தனா். ஆனால் மேகமூட்டம் காரணமாக மேற்கு திசையில் சூரியன் மறையும் காட்சியை காணமுடியாமல் ஏமாற்றமடைந்தனா்.
சந்திரன் உதயம்,,.
சூரியன் மறையும் அதேநேரத்தில் கிழக்கு திசையில் சந்திரன் உதயமாகும் காட்சியும் தெளிவாகத் தெரியவில்லை. சுமாா் 6.45 மணிக்கு மேல் முழு பௌா்ணமியாக தெளிவாகக் காண முடிந்தது.