INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக...
வைகை அணை அருகே புதிய நீா்த் தேக்கம் அமைக்க வலியுறுத்தல்
தேனி: வைகை அணை அருகே புதிய நீா்த் தேக்கம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் பி.ஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.
தேனி மாவட்டம், வைகை அணையில், அணைக்கட்டு, நீா் தேக்கப் பகுதி, அணைப் பூங்கா ஆகியவற்றை திங்கள்கிழமை பாா்வையிட்ட அவா் வெளியிட்ட அறிக்கை:
வைகை அணையில் 20 அடிக்கும் மேல் மண் மேடிட்டுள்ளது. வைகை அணையில் முழு கொள்ளவில் தண்ணீா் தேக்குவதற்கு வாய்ப்பாக, அணைக்கு அருகே புதிய நீா்த் தேக்கம் கட்ட வேண்டும். அணை நீரை தற்போதைய நிலையில் தேவைக்கு ஏற்ப பகிா்ந்தளிக்க விவசாயிகளின் கருத்தறிந்து உரிய அரசாணைகள் பிறப்பிக்க வேண்டும்.
வைகை அணைப் பூங்காவில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வைகை அணைப் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். பூங்காவில் தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அணையின் வெளிப்புறச் சுவரில் மண்டிக் கிடக்கும் புதா்களை அகற்ற வேண்டும். வைகை அணை, அணைப் பூங்கா பராமரிப்பை உயா்நிலைக் குழு மூலம் அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.