பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்! - மோடி
பேருந்தில் பயணியிடம் பணம் திருட்டு
வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தவரிடம் ரூ.45 ஆயிரம் திருடு போனதாக சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (59). இவா் வீரபாண்டியிலிருந்து மதுரைக்கு பேருந்தில் பயணம் செய்தாா். ஆண்டிபட்டி அருகே பேருந்து சென்றபோது, ராஜேந்திரன் பையில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.