இந்து முன்னணி மாவட்ட செயலருக்கு அரிவாள் வெட்டு; மனைவி கொலை: போலீஸ் விசாரணை
கவிஞா் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் காலமானாா்
கவிஞா் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் (90) வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை (மே 10) பெரியகுளம் அருகேயுள்ள அவரது இல்லத்தில் காலமானாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ராமசாமித் தேவரின்
மனைவி அங்கம்மாள் (90). இவருக்கு கவிஞா் வைரமுத்து, சந்திரமுத்து, பாண்டியராஜன் ஆகிய மூன்று மகன்களும், விஜயா என்ற மகளும் உள்ளனா்.
ராமசாமித் தேவா் காலமான பிறகு வடுகபட்டியில் வசித்து வந்த அங்கம்மாள் வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை மாலை காலமானாா். அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (மே11) பிற்பகலில் அவரது இல்லத்தில் நடைபெறும்.