செய்திகள் :

மேஷம் - குருப்பெயர்ச்சி பலன்கள்: மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும்; நன்மைகள் என்னென்ன?

post image

1. இதுவரையிலும் உங்களைக் குழப்பியடித்த சிந்தனைகள், குழப்பங்கள் எல்லாம் உங்களைவிட்டு நீங்கும். துடிப்புடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.

2. குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கிறார். அதனால் முயற்சிகளில் சிற்சில தடங்கல்கள், இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல் ஏற்படும். எனினும் சமாளித்து மீள்வீர்கள். 

3. எந்தக் காரியமாக இருந்தாலும் இரண்டாவது திட்டம் ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பெரியோர் ஆலோசனை பக்கபலமாக இருக்கும். புதியவர்களை வீட்டுக்கு அழைத்து வரவேண்டாம்.

மேஷம்

4. நிகழும் குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சிறு சிறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும், சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. கணவன் - மனைவி  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உற்றத் துணையாக விளங்குவதால், சுபிட்சம் கூடும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

5. குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், தந்தை வழியில் சொத்துக்கள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி பாசம் கூடும். 

6. சிலருக்கு, விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டா கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன் பைசலா கும். மகனை, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு உங்கள் அந்தஸ்துக்குத் தகுந்த மணமகன் அமைவார்.

7. குருபகவான் லாபஸ்தானத்தைப் பார்ப்பதால்,  சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். 

8. இந்த ராசியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். மேலிடத்தை அனுசரித்துப் போகவும். வாகனத்தை இயக்கும்போது செல்போனில் பேச வேண்டாம்.

9. வியாபாரத்தில் திடீர் லாபங்கள் சேர்ந்து, உங்களை மகிழ்விக்கும்.  புதிய முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், வருங்கால சந்தை நிலவரத்தைக் கவனத்தில்கொண்டு புது முதலீடு செய்யுங்கள். கூட்டுத்தொழிலில் சில பிரச்னைகள் உண்டு. ஸ்டேஷனரி, ஹோட்டல், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

மேஷம்

10. உத்தியோகத்தில் வேலைப்பளு உண்டு. சில பணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலைந்துதிரிந்து முடிக்கவேண்டியது வரும். சிலருக்கு, விரும்பத் தகாத இடமாற்றமும் வந்து சேரலாம். எனினும், எது நிகழ்ந்தாலும் முடிவில் உங்களுக்கு மிகப்பெரிய நன்மை அளிப்பதாகவே அமையும்.

11. ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப் பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஞானமலை. வள்ளிதேவியுடன் முருகப்பெருமான் தங்கியிருந்த தலம் இது. அருணகிரிநாதருக்கு, தனது பாத தரிசனத்தை முருகன் காட்டியருளிய தலமும் இதுவே. ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில், இங்கு சென்று வழிபட்டு வாருங்கள்; நன்மைகள் நடக்கும்!

மீனம் குருப்பெயர்ச்சி பலன்கள்: நட்பில் கவனம்; புதிய வாய்ப்புகள் தேடிவரும் - முழுப் பலன்கள் இதோ!

கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. எதிலும் நிதானமாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குருபகவான் இப்போது நான்காம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால், தடங்கல்கள் நீங்கும். செயலில் வேகம் பிறக்கும். சகல வகைக... மேலும் பார்க்க

கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள்: விரக்தியும் தாழ்வு மனப்பான்மையும் விலகும்; பதவிகள் தேடிவரும்!

கும்பம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. குரு பகவான் 5-ம் இடத்தில் அமரவுள்ளதால், இனி பல்வேறு யோகங்களை அருளப் போகிறார். மன நிலை, குணநிலை, உடல்நிலை அனைத்து வகையிலும் சந்தோஷம் உண்டு. பொருளாதார நிலையில் முன்னே... மேலும் பார்க்க

மகரம் குருப்பெயர்ச்சி பலன்கள்: கௌரவப் பதவிகள் தேடி வரும்; கவனமாக இருக்கவேண்டிய விஷயம் எது?

மகரம் - குருப்பெயர்ச்சி பலன்கள்1. பொறுமையும் பொறுப்பான செயல்பாடுகளும் மிகுந்த உங்களுக்கு குரு பார்வையால் சாதக பலன்கள் உண்டாகும். அலைச்சலும் வேலைச்சுமையும் உண்டு என்றாலும், பலவிதத்திலும் ஆதாயம் உண்டாகு... மேலும் பார்க்க

தனுசு குருப்பெயர்ச்சி பலன்கள்: துரோகம், ஏமாற்றம் விலகும்; தொட்ட காரியம் துலங்கும்!

தனுசு- குருப்பெயர்ச்சி பலன்கள்1. இதுவரையிலும் 6-ம் இடத்தில் மறைந்துகிடந்த உங்களின் ராசிநாதனான குரு பகவான், இப்போது 7-ல் வந்து அமர்கிறார். ஆகவே, உங்களைச் சூழ்ந்திருந்த பகை, துரோகம், ஏமாற்றம் அனைத்தும் ... மேலும் பார்க்க

Gurupeyarchi 2025 | குருப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை | துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்கள்

பாரதி ஸ்ரீதர் 12 ராசிகளுக்குமான குருப்பெயர்ச்சிபலன்களை கணித்துச் சொல்கிறார். கூடவே அவர்கள் சென்று வழிபடவேண்டிய குரு பரிகாரத்தலங்கள் குறித்தும் சொல்கிறார். மேலும் பார்க்க