வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
பொறியியல் சேர்க்கை: 1.39 லட்சம் பேர் விண்ணப்பம்!
பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.
இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சோ்க்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கப்பட்டது. முதல் நாளில் மட்டும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று(மே 14) மாலை 6 மணி நிலவரப்படி 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 74,971 மாணவர்கள் கட்டணம் செலுத்தியும் 39,844 மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்தும் உள்ளனர்.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!